Shanmugan Murugavel / 2022 நவம்பர் 07 , பி.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், அஸ்டன் வில்லாவின் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் தோற்றிருந்தது.
இதேவேளை, செல்சியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றிருந்தது. ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை கப்ரியல் ஜெஸூஸ் பெற்றிருந்தார்.
இந்நிலையில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றிருந்தது. லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் மொஹமட் சாலா பெற்றிருந்ததோடு, டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹரி கேன் பெற்றிருந்தார்.
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026