Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 16 , பி.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், வி.எஃப்.எல் போச்சுமின் மைதானத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் பொரூசியா டொட்டமுண்ட் தோற்றது.
போச்சும் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ஜியோர்கொஸ் மஸூராஸ் பெற்றிருந்தார்.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற பயேர்ண் மியூனிச்சுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பயெர் லெவர்குசன் சமப்படுத்தியது.
புண்டெலிஸ்கா புள்ளிகள் பட்டியலில் 55 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் மியூனிச் உள்ளது. 47 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் லெவர்குசனும், 39 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் ஐன்ரச்ட் பிராங்பேர்ட்டும், 37 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் ஆர்.பி லெய்ப்ஸிக்கும் காணப்படுகின்றது. இதில் பிராங்க்பேர்ட் மற்றைய அணிகளை விட ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.
47 minute ago
52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
52 minute ago
2 hours ago