2025 நவம்பர் 08, சனிக்கிழமை

வெண்கலப் பதக்கத்துடன் நாடு திரும்பினார் காயா

Editorial   / 2025 ஒக்டோபர் 27 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய இளையோர் விளையாட்டு போட்டியில், கோல்வ் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் நிகழ்ச்சியில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கையின் காயா தலுவத்த திங்கட்கிழமை (27) காலை நாடு திரும்பினார். 

பஹ்ரெய்னில் நடைபெற்றுவரும் 3ஆவது ஆசிய இளையோர் விளையாட்டு போட்டியில், கொல்வ் போட்டிகள் அக்டோபர் 23ஆம் திகதி ஆரம்பமாகி 25ஆம் திகதி நிறைவுபெற்றது. 

இரண்டு சுற்றுகளைக் கொண்ட பெண்களுக்கான தனிநபர் கோல்வ் போட்டியை 133 நகர்வுகளில் நிறைவு செய்த காயா தலுவத்த 3ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார். அப் போட்டியில் சீன வீராங்கனைகள் இருவர் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X