2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வென்றது பரிஸ் ஸா ஜெர்மைன்

Editorial   / 2017 டிசெம்பர் 10 , பி.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டியொன்றில் லில்லி அணியை பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது.

இப்போட்டியின் 28ஆவது நிமிடத்தில், கிலியான் மப்பே கொடுத்த பந்தை அஞ்சல் டி மரியா கோலாக்க முன்னிலை பெற்ற பரிஸ் ஸா ஜெர்மைன், 49ஆவது நிமிடத்தில் அஞ்சல் டி மரியா கொடுத்த பந்தை ஸ்கேவியர் பஸ்டோரே கோலாக்க 2-0 என முன்னிலை பெற்றது.

பின்னர், 86ஆவது நிமிடத்தில் லில்லி அணியின் அன்வர் எல் காஸி கோலொன்றைப் பெற்றபோதும் போட்டியின் இறுதிக் கணத்தில் கிலியான் மப்பே பெற்ற கோல் காரணமாக, இறுதியில், 3-1 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X