Editorial / 2017 டிசெம்பர் 21 , பி.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற போட்டியொன்றில், 3-1 என்ற கோல் கணக்கில் கோன் அணியை பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, கிலியான் மப்பே, எடின்சன் கவானி, யூரி பெர்சிச்சி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். கோன் சார்பாகப் பெறப்பட்ட கோலை இவான் சன்டினி பெற்றார்.
நடப்பு லீக் 1 சம்பியன்களான மொனாக்கோ, 2-1 என்ற கோல் கணக்கில் றென்னோ அணியை வென்றது. மொனாக்கோ சார்பாக, றடமெல் பல்காவோ, கெய்ட்டா பல்டே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். றென்னோ அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை வாஹ்பி கஸாரி பெற்றார்.
2 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
7 hours ago