Mayu / 2024 ஜனவரி 01 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது
சிட்னியில் நாளை அதிகாலை 5 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் அவுஸ்திரேலியா
வென்றுள்ள நிலையில், இப்போட்டியில் தோல்வியைத் தவிர்த்தாலே வெள்ளையடிப்பை
பாகிஸ்தான் தடுக்கலாம்.
பாகிஸ்தானைப் பொறுத்த வரையில் இமாம்-உல்-ஹக்குப் பதிலாக புதுமுகவீரர் சைம் அயூப்
களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுவதோடு, ஹஸன் அலிக்குப் பதிலாக மொஹமட் நவாஸ்
களமிறங்குவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவுக்கு சவாலளிப்பதற்கு பாகிஸ்தானின் பாபர் அஸாம் மற்றும் செளட் ஷகீல்
ஆகியோர் பெரிய இனிங்ஸ்களை ஆடவேண்டியுள்ளதுடன், பிடியெடுப்புகளைத் தவற விடாமல்
பிடியெடுக்க வேண்டியுள்ளது.
அவுஸ்திரேலிய அணியில் மாற்றமெதுவும் இருக்காதென நம்பப்படுகிறது.
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026