Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 10 , பி.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக்கில், நேற்று இடம்பெற்ற போட்டியொன்றில், நடப்பு பிறீமியர் லீக் சம்பியன்களான செல்சி வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டிடம் தோல்வியுற்றது.
இப்போட்டியின் ஆறாவது நிமிடத்தில், மனுவல் லன்ஸினியுடன் பந்தைப் பரிமாறிக் கொண்டு வந்த மார்கோ அர்னாடூவிச் பெற்ற கோல் காரணமாகவே 0-1 என்ற கோல் கணக்கில் செல்சி தோல்வியடைந்தது.
குறித்த கோலுக்கு பதிலளிப்பதற்கு செல்சி முயன்றபோதும் ஒழுங்கமைக்கப்பட்ட வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் பின்களத்தாலும் வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் அட்ரியனின் அபாரமான இரண்டு தடுப்புகளாலும் செல்சியால் கோல் பெற முடியவில்லை. போட்டியின் இரண்டாவது பாதியில் செல்சியின் முன்கள வீரர் அல்வரோ மொராட்டாவுக்கு தனித்து வாய்ப்பு கிடைத்தபோதும் அவர் அவ்வாய்ப்பை வீணாக்கி, கோல் கம்பத்துக்கு வெளியே பந்தை உதைத்திருந்தார்.
இதேவேளை, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ், 5-1 என்ற கோல் கணக்கில் ஸ்டோக் சிற்றியை வென்றது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ் சார்பாக, ஹரி கேன் 2 கோல்களையும் சொன் ஹியூங் மின், கிறிஸ்டியன் எரிக்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் றயான் ஷோக்ரூஸ் பெற்றுக் கொடுத்த நிலையில், அவரே ஸ்டோக் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலையும் பெற்றிருந்தார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago