Shanmugan Murugavel / 2022 ஜனவரி 05 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் தோற்றது.
வொல்வ்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜோவா மோட்டின்யோ பெற்றிருந்தார்.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 53 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றி காணப்படுகின்றது. 43 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் செல்சியும், ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ள லிவர்பூல் 42 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும், ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ள ஆர்சனல் 35 புள்ளிகளுடன் நான்காமிடத்திலும் காணப்படுகின்றது.
10 minute ago
19 minute ago
24 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
24 minute ago
1 hours ago