2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

வென்ற ஆர்சனல் முதலிடத்துக்குச் சென்றது

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டிகளில் ஆர்சனல், ஸ்டோக், நோர்விச், டொட்டேன்ஹாம், வெஸ்ட் புரோம், வெஸ்ட் ஹம் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளதோடு மன்செஸ்டர் யுனைட்டெட், செல்சி அணிகளுக்கிடையிலான போட்டியும் கிறிஸ்டல் பலஸ், சுவான்சீ அணிகளுக்கிடையிலான போட்டியும் சமநிலையில் முடிவடைந்தது.

ஆர்சனல், பௌர்ன்மௌத் அணிகளுக்கிடையிலான போட்டியில் ஆர்சனல் அணி, 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்துக்கு சென்றுள்ளது. இப்போட்டியில் பெறப்பட்ட இரு கோல்களையும் ஆர்சனலின் நட்சத்திர வீரர் மெசூட் ஒஸில், போட்டியின் 27ஆவது, 63ஆவது நிமிடங்களில் பெற்றிருந்தார். தவிர, இப்போட்டியின் போது, பந்தொன்றை தடுத்தபோது 170ஆவது தடவையாக பிறீமியர் லீக்கில் பந்தைத் தடுத்த ஆர்சனலின் கோல்காப்பாளர் பீற்றர் செக், அதிக தடவைகள், பிறீமியர் லீக்கில் பந்தை தடுத்த சாதனையை ஏற்படுத்தினார்.

இதேவேளை, மன்செஸ்டர் யுனைட்டெட், செல்சி அணிகளுக்கிடையிலான போட்டியில், இரு அணிகளும் கோல்களைப் பெற்றிருக்காத நிலையில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .