Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 மார்ச் 21 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஷமி டுபாயில் ஹோட்டல் ஒன்றில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தது உண்மையே என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கொல்கத்தா பொலிஸாரிடம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த மொஹமட் பாயின் வற்புறுத்தலின் பேரில் கொல்கத்தாவில் உள்ள பாகிஸ்தானை சேர்ந்த அலிஸ்பா என்ற பெண்ணிடம் இருந்து ஷமி பணம் பெற்றுக் கொண்டதாக ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் கொல்கத்தா பொலிஸாரிடம்ம முறைப்பாடு செய்திருந்தார்.
கடந்த மாதம் 16ஆம் திகதி தென்னாபிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு-20 தொடர் முடிவடைந்தவுடன் ஷமி, டுபாய் சென்றாரா என்பதை அறிந்து கொள்வதற்காக அவரது பயண விபரங்களை சமர்ப்பிக்குமாறு கொல்கத்தா பொலிஸார் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடம் கோரியிருந்தனர்
பெப்ரவரி 17 மற்றும் 18ஆம் திகதிகளில் ஷமி டுபாய் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார் என்பதை உறுதிப்படுத்துவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
முன்னதாக உத்தரபிரதேசத்தில் உள்ள அம்ரோகாவில் உள்ள மொஹமட் ஷமியின் வீட்டில் பொலிஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு ஷமியும் அவரது குடும்பத்தினரும் ஒத்துழைப்பு வழங்கினர்.
ஷமியின் மனைவி ஹசின் ஜஹான், தனது கனவர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், கொலை செய்ய முயற்சிப்பதாகவும், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025