Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 21 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் பணிப்பாளர் கிறேமி ஸ்மித், ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் மார்க் பெளச்சரின் நடத்தை குறித்து உத்தியோகபூர்வமான விசாரணை ஒன்றை சபை ஆரம்பிக்கவுள்ளது.
சமூக நீதி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் அறிக்கையின் உள்ளடக்கங்களை மீளாய்வு செய்த பின்னரே குறித்த முடிவை சபை எடுத்துள்ளது.
இந்த விசாரணையானது அடுத்தாண்டு ஆரம்பத்தில் இடம்பெறவுள்ளதுடன், சுயாதீன சட்ட தொழில் நிபுணர்களால் நடாத்தப்படவுள்ளது.
தென்னாபிரிக்காவின் முன்னாள் அணித்தலைவரான ஸ்மித், முன்னாள் வீரரான பெளச்சர் ஆகியோர் அவர்களது பதவிகளில் தொடரவுள்ளதுடன், இந்தியாவுக்கு எதிரான தொடரின்போதும் அவர்களின் பணிகளை ஆற்றவுள்ளனர்.
மேற்கூறப்பட்ட அறிக்கையில், ஸ்மித்தும், பெளச்சரும், இன்னொரு முன்னாள் அணித்தலைவரான ஏ.பி டி வில்லியர்ஸ் போன்றோர் சட்டத்துக்கு புறம்பான, இனத்தின் அடிப்படையிலான வேறுபடுத்தும் நடத்தைகளில் ஈடுபட்டனர் போன்று குறிப்பிடப்பட்டுள்ளது.
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026