Shanmugan Murugavel / 2016 ஜூன் 13 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பாப்வே, இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியிலும், இந்திய அணி இலகுவாக வெற்றிபெற்றுள்ளது.
ஹராரேயில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட சிம்பாப்வே அணி, 34.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, இறுதி 7 விக்கெட்டுகளையும் 20 ஓட்டங்களுக்கு இழந்தது.
துடுப்பாட்டத்தில் வுசி சிபன்டா 53 (69), சமு சிபாபா 21 (26) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் யுஸ்வேந்த்ரா சஹால் 3, பரிந்தர் ஸ்ரான் 2, தவால் குல்கர்ணி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலளித்தாடிய இந்திய அணி, 26.5 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அம்பத்தி ராயுடு ஆட்டமிழக்காமல் 41 (44), கருண் நாயர் 39 (68), லோகேஷ் ராகுல் 33 (50) ஓட்டங்களைப் பெற்றனர்.
போட்டியின் நாயகனாக, யுஸ்வேந்த்ரா சஹால் தெரிவானார்.
இத்தொடரின் முதலாவது போட்டியிலும் வெற்றிபெற்ற இந்திய அணி, இத்தொடரை 2-0 என்றகணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
31 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago