Shanmugan Murugavel / 2016 ஜனவரி 04 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் அதிரடி இரட்டைச் சதத்தைப் பெற்ற இங்கிலாந்தின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ், தனது வாழ்நாளில், இப்படி இனிமேல் அனேகமாகத் துடுப்பெடுத்தாட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
24 வயதான பென் ஸ்டோக்ஸ், 30 நான்கு ஓட்டங்களையும் 11 ஆறு ஓட்டங்களையும் விளாசி, 258 ஓட்டங்களைப் பெற்றார். இவ்வோட்டங்களைப் பெற, வெறுமனே 198 பந்துகளை மாத்திரமே அவர் எடுத்துக் கொண்டார்.
தனது இரட்டைச் சதத்தை 163 பந்துகளில் அடைந்த ஸ்டோக்ஸ், டெஸ்ட் போட்டிகளில் பெறப்பட்ட இரண்டாவது வேகமான இரட்டைச் சதம் என்ற சாதனையும் இங்கிலாந்து சார்பாகப் பெறப்பட்ட வேகமான இரட்டைச் சதம் என்ற சாதனையையும் படைத்தார். முதலிடத்தில், நியூசிலாந்தின் நேதன் அஸ்டிலில் 153 பந்துகளில் பெறப்பட்ட இரட்டைச் சதம் காணப்படுகிறது.
இந்தச் சாதனையைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், 'எனது வாழ்வில், இவ்வாறு இனிமேல் அனேகமாக விளையாட மாட்டேன். ஆனால், ஒருமுறை அவ்வாறு செய்திருக்கிறேன், ஆகவே, அதையாவது சொல்ல முடியும். வெப்பநிலை அதிகமாக இருந்த காரணத்தால் ஓடுவது சிரமமென்பதால், என்னால் இயன்றளவு நான்கு, ஆறு ஓட்டங்களை அடிக்க முனைந்து கொண்டிருந்தேன்" என அவர் தெரிவித்தார்.
துடுப்பெடுத்தாடும் போது, துடுப்பாட்ட மைல்கல்களைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கவில்லை எனத் தெரிவித்த அவர், சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்துவதை விட, வெற்றிபெறும் அணியொன்றில் இடம்பெறுவதை விரும்புவதாகவும் தெரிவித்தார்.
பென் ஸ்டோக்ஸின் அதிரடியின் காரணமாகவும், ஜொனி பெயர்ஸ்டோவின் சதம் காரணமாகவும், 6 விக்கெட்டுகளை இழந்து 629 ஓட்டங்களுடன், இங்கிலாந்து அணி தனது முதலாவது இனிங்ஸை இடைநிறுத்தியது. துடுப்பெடுத்தாடிவரும் தென்னாபிரிக்க அணி, 2ஆவது நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
28 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
7 hours ago