Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனைத்து அணிகளும் ஒரு மோசமான நாளைக் கொண்டிருக்குமெனவும் எங்களது மோசமான நாளொன்று கழிந்து விட்டதாகவும் டெல்லி டெயார்டெவில்ஸ் அணியின் தலைவர் சகீர் கான் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் டெல்லி டெயார்டெவில்ஸ் அணிக்குமிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற இவ்வருட இந்தியன் பிறிமியர் லீக்கின் இரண்டாவது போட்டியில் 9 விக்கெட்டுகளால் டெல்லி டெயார்டெவில்ஸ் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி டெயார்டெவில்ஸ் அணி, 17.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 98 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. பந்துவீச்சில் கொல்கத்தாநைட் ரைடர்ஸ் அணி சார்பாக அன்றே ரஸல், பிராட் ஹொக் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் ஜோன் ஹேஸ்டிங்ஸ், பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 14.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக கௌதம் காம்பீர் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களையும் ரொபின் உத்தப்பா 35 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்நிலையிலேயே கருத்து தெரிவித்த டெல்லி டெயார்டெவில்ஸ் அணியின் தலைவர் சகீர் கான், தாங்கள், தங்களது இளம் துடுப்பாட்ட வரிசைக்கு சுதந்திரத்தை வழங்கியுள்ளதாகவும் அவர்கள் விரைவாக கற்றுக் கொள்பவர்கள் எனவும் அவர்கள் சக்தியைக் கொண்டிருக்கிறார்கள் எனவும் தங்களது திட்டம், தயார்படுத்தல் தொடர்பில் தாங்கள் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
19 minute ago
25 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
25 minute ago
1 hours ago