2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஒலிம்பிக் 2016: துப்பாக்கிமுனையில் அவுஸ்திரேலிய வீராங்கனையிடம் வழிப்பறி

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 21 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்கவுள்ள றியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக றியோவுக்குச் சென்றுள்ள அவுஸ்திரேலியாவின் அங்கவீன வீராங்கனையும் அணி அதிகாரியொருவரும், துப்பாக்கிமுனையில் வைத்து, வழிப்பறிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

படகோட்ட வீராங்கனையான லெய்சில் தெஸ்ச்-உம், அணியின் உடற்கூற்று நிபுணரான சாரா றொஸ்ஸூமே, இவ்வாறு வழிப்பறியில் சிக்கியுள்ளனர். அவர்கள் தங்கியுள்ள ஹொட்டலில், சைக்கிளோடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இரண்டு ஆண்கள், அவர்களை மிரட்டியுள்ளனர். அவர்களில் ஒருவரிடம் கைத்துப்பாக்கி இருந்துள்ளது. வீராங்கனை மீது துப்பாக்கியைக் காட்டிய அந்நபர், பின்னர் அவ்வீராங்கனையை நிலத்தில் தள்ளி வீழ்த்தியுள்ளார். அவர்களிடம் வழிப்பறி செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான விவரங்கள் வெளியாகியிருக்கவில்லை.

சீகா வைரஸ், அந்நகரத்தின் நிதியியல் பிரச்சினைகள் என, ஏற்கெனவே பல சவால்களைச் சந்தித்துள்ள றியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு, தற்போது பாதுகாப்பும் மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தையடுத்து, ஒலிம்பிக் போட்டிகளுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டுமென, அவுஸ்திரேலிய ஒலிம்பிக் செயற்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .