2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

கட்டாயப்படுத்தி ஓய்வுபெற வைக்கப்பட்டேன்

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது இடம்பெறும் மாஸ்டேர்ஸ் சம்பியன்ஸ் லீக்கில் விளையாடுவதற்கான அனுமதியை பெறும் பொருட்டு, சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற வைக்கப்பட்டதாக மேற்கிந்தியத்தீவுகளின் ஜாம்பவான்களில் ஒருவரான ஷிவ்நரைன் சந்திரபோல் தெரிவித்துள்ளார்.

நான், 23ஆம் திகதி ஓய்வுபெற்றதாக இருந்த குறிப்பொன்றுடனேயே, மாஸ்டேர்ஸ் சம்பியன்ஸ் லீக்கில் விளையாடுவதற்கான அனுமதி, தனக்கு மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் சபையால் வழங்கப்பட்டதாக சந்திரபோல் தெரிவித்துள்ளார். நான், ஓய்வை அறிவிக்காவிட்டால், அவர்கள், மாஸ்டேர்ஸ் சம்பியன்ஸ் லீக்கில் விளையாடுவதற்கான அனுமதியை திரும்பப்பெற்றிருப்பார்கள் எனத் தெரிவித்தார். மேற்கிந்தியத்தீவுகளின் கிரிக்கெட் சபைக்கும் வீரர்களுக்கிடையிலுமான மோசமான உறவின் ஒரு அங்கமாக இது அமைந்துள்ளது.

தான், உள்ளூர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவில்லை எனத் தெரிவித்த ஷிவ்நரைன் சந்திரபோல், இன்னும் இரண்டு வாரங்களில் கயானா அணிக்கு ஆடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

41 வயதான ஷிவ்நரைன் சந்திரபோல், இறுதியாக கடந்தாண்டு மே மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்றில் பங்கேற்றதுடன், கடந்த டிசம்பரில் அறிவிக்கப்பட்ட வீரர்களுக்கான ஒப்பந்தத்திலும் இடம்பெற்றிருக்கவில்லை.  இந்நிலையில், இரண்டு வாரங்கள், மாஸ்டேர்ஸ் சம்பியன்ஸ் லீக்கில் விளையாடுவதற்காக ஷிவ்நரைன் சந்திரபோலுக்கு 30,000 அமெரிக்க டொலர்கள் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .