Shanmugan Murugavel / 2016 ஜூன் 09 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெற்றுவரும், தென்னமரிக்க நாடுகளுக்கான கோப்பா அமெரிக்காவின் 100ஆவது தொடரின் ஆறாவது நாளில் இடம்பெற்ற குழு பி போட்டியொன்றில், கால்பந்தாட்ட ஜாம்பவானான பிரேசில் அணி அதிரடி வெற்றியொன்றை பெற்றுக் கொண்டுள்ளது.
பிரேசில், ஹெய்ட்டி அணிகளுக்கிடையே இடம்பெற்ற போட்டியில் 7-1 என்ற கோல்கணக்கில் பிரேசில் வெற்றி பெற்றிருந்தது. பிரேசில் சார்பாக பிலிப்பெ கோத்தின்ஹோ ஹட்ரிக் கோல் பெற்றார். தொடரின் தனது முதலாவது போட்டியை, சர்ச்சைக்குரிய முறையில் ஈக்குவடோருடன் சமநிலையில் முடித்துக் கொண்ட பிரேசிலுக்கு இப்போட்டி முடிவு நிச்சயமாக முனைப்பொன்றை வழங்கியுள்ளது.
இதேவேளை, ஈக்குவடோர், பெரு ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற மற்றைய குழு பி போட்டியில், இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்றிருந்த நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago