2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

'சச்சினின் முன்னால் செய்ய முடிந்தமை மகிழ்ச்சி'

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 20 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, பாகிஸ்தான் அணிகள், உலகக் கிண்ணப் போட்டிகளிலும் உலக இருபதுக்கு-20 தொடரின் போட்டிகளிலும் இதற்கு முன்னர் சந்தித்த போது, இந்திய அணியே வெற்றிபெற்றிருந்த நிலையில், இரு அணிகளுக்குமிடையில் சனிக்கிழமை இடம்பெற்ற போட்டி, இத்தொடரைப் பொறுத்தவரை முக்கியமானதாக இருந்ததோடு, இரு நாடுகளினதும் வரலாற்றிலும் முக்கியமானதாக அமைந்தது.

சுழற்பந்து வீச்சுக்கு அதிகம் சாதமாகக் காணப்பட்ட இந்த ஆடுகளத்தில், மெதுவாகப் பந்தை வீசி, அதைச் சுழற்ற முயன்ற வேகப்பந்து வீச்சாளர்களும், அதிக ஆபத்தை விளைவிப்பவர்களாக இருந்தார். 18 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த பாகிஸ்தான் அணி, 5 விக்கெட்டுகளை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலளித்தாடிய இந்திய அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 23 ஓட்டங்களுடன் காணப்பட்ட போது, பாகிஸ்தான் அணி முன்னிலையில் காணப்பட்டது. ஆனால், 37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களைக் குவித்த விராத் கோலி, இந்திய அணி வெற்றிபெறுவதை உறுதி செய்திருந்தார்.

இப்போட்டியைப் பார்வையிடுவதற்காக, உலக சாதனையாளர் சச்சின் டென்டுல்கரும் மைதானத்துக்கு வந்திருந்த நிலையில், தனது அரைச்சதத்தைப் பூர்த்தி செய்த விராத் கோலி, அவரை நோக்கிக் குனிந்து, மரியாதை செய்திருந்தார். அது குறித்துக் கருத்துத் தெரிவித்த கோலி, 'எனது உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது. எனது சகோதரரும் சச்சின் டென்டுல்கரும் அங்கு காணப்பட்டார்கள். சச்சின் அண்ணன், இந்தியாவுக்காக பல ஆண்டுகளாக இதைச் செய்வதை நான் பார்த்திருக்கிறேன், மக்கள் அவரை நோக்கிக் கத்துவதையும் பார்த்திருக்கிறேன். அவருக்கு முன்னால் ஒருமுறை வெற்றியைப் பெற்றுக் கொடுக்க எனக்கு வாய்ப்புக் கிடைத்தது, அதை அவர் கொண்டாடினார். அவரால் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த இளையவன் ஒருவனாக எனக்கு ஏற்படும் உணர்வை விவரிக்க முடியாது. அவரின் முன்னால் வெற்றியைப் பெற்றுக் கொடுத்து, அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க முனைந்தமை குறித்து, நான் மிகவும் நன்றியுணர்வுடன் இருக்கிறேன்" என அவர் தெரிவித்தார்.

நியூசிலாந்துக்கெதிரான முதற்போட்டியில் தோல்வியடைந்தமை குறித்து மிகவும் ஏமாற்றமடைந்திருந்ததாகத் தெரிவித்த விராத் கோலி, அதன் பின்னர், வெற்றிபெறுவதற்காக என்ன வேண்டுமென்பதைத் திட்டமிருந்ததாகக் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .