Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 06 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
செப் பிளட்டர் தலைமையிலான சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனம் (பீபா), பல்வேறான சர்ச்சைகளைச் சந்தித்திருந்த நிலையில், பிளட்டரைத் தொடர்ந்து பதவியேற்ற ஜியானி இன்பான்டினோ, சர்ச்சைகளையும் தேவையற்ற குழப்பங்களையும் குறைப்பாரென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது அவரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
உலகத் தலைவர்கள் பலரைச் சிக்கவைத்துள்ள பனாமா ஆவணங்களின்படி, இந்தச் சர்ச்சைகளிலும் ஜியானி இன்பான்டினோவும் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் (யு.ஈ.எப்.ஏ) சட்ட சேவைகள் பணிப்பாளராக ஜியானி இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமொன்றே சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. 2003 தொடக்கம் 2006ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், முன்னாள் பீபா தலைவரான செப் பிளட்டரைப் பதவி விலகுவதில் முக்கியமான காரணமாக அமைந்த நிறுவனமொன்றுடன் யு.ஈ.எப்.ஏ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், ஜியானியும் கைச்சாத்திட்டுள்ளார். எனவே, இதில் மோசடிகள் இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
எனினும், குறித்த ஒப்பந்தங்கள், வெளிப்படையானவை எனத் தெரிவித்துள்ள யு.ஈ.எப்.ஏ, அவற்றில் தவறுகள் எவையும் இடம்பெற்றிருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.
20 minute ago
26 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
1 hours ago