Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 11 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான இரவிச்சந்திரன் அஷ்வின், தான் இறுதியாக விளையாடிய மூன்று இருபதுக்கு-20 போட்டிகளில் ஐந்து ஓவர்களை மட்டுமே வீசியுள்ள நிலையில், இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் டோணி, இன்னமும் இரவிச்சந்திரன் அஷ்வினை தனது துருப்புச்சீட்டாக கருதுகிறாரா என்று கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.
இந்நிலையில், தற்போதும் இரவிச்சந்திரன் அஷ்வினே தனது துருப்புச்சீட்டு எனத் தெரிவித்துள்ள மகேந்திரச சிங் டோணி, இரவிச்சந்திரன் அஷ்வின் எந்த நேரத்திலும் சிறப்பாக செயற்பாடுவார் எனத் தெரிவித்துள்ளார்.
தான் கூறியது போன்று, முதல் ஆறு ஓவர்களிலோ அல்லது அதிக ஓட்டங்கள் பெறப்படும் இறுதி ஓவர்களிலோ என பல சமயங்களில் இரவிச்சந்திரன் அஷ்வின், தன்னை மீட்டெடுத்ததாக மும்பையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் மகேந்திர சிங் டோணி தெரிவித்துள்ளார்.
இந்தியன் பிறிமியர் லீக்கின் ஆரம்பப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும் றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியும் மோதியிருந்த நிலையில், இப்போட்டியில் றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணி சார்பாக பங்கேற்ற இரவிச்சந்திரன் அஷ்வின், ஒரு ஓவரினை மட்டுமே வீசியிருந்த நிலையில், அணியில் அவரின் வகிபாகம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருந்தன.
இந்நிலையில் கருத்து தெரிவித்த மகேந்திர சிங் டோணி, குறைந்த அழுத்தமுடைய போட்டியில் முருகன் அஷ்வினுக்கு சந்தர்ப்பத்தை வழங்க முடிவு செய்ததாலேயே, இரவிச்சந்திரன் அஷ்வின் மேலதிக ஓவர்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்படவில்லையென்றும் இனிங்ஸின் இறுதி ஓவர்களில் வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவது சிறந்த தெரிவாக காணப்பட்டதால், அந்தச் சந்தர்ப்பத்திலும் இரவிச்சந்திரன் அஷ்வின் பந்துவீச வேண்டிய தேவை ஏற்படவில்லையென்றும் தெரிவித்தார்.
19 minute ago
25 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
25 minute ago
1 hours ago