Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 04 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகள் அணி, உலக இருபதுக்கு-20 தொடரை வெற்றிகொண்ட பின்னர், கட்டுரையொன்றை எழுதியுள்ள பிரபல நேர்முண வர்ணனையாளரான மார்க் நிக்கலஸ், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் டெரன் சமியிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
மார்க் நிக்கலஸ் எழுதிய முன்னைய கட்டுரையொன்றில், மேற்கிந்தியத் தீவுகள் அணியை, 'மூளையில் குறைந்த அணி" எனக் குறிப்பிட்டிருந்தமை தொடர்பாக, தனது விமர்சனத்தை இறுதிப் போட்டிக்கு முன்பாகவும் இறுதிப் போட்டியை வென்ற பின்னரும் டெரன் சமி வெளியிட்டிருந்த நிலையிலேயே, மார்க் நிக்கலஸ், தற்போது மன்னிப்புக் கோரியுள்ளார்.
டெரன் சமியிடம் மன்னிப்புக் கோருவதாகவும், அவர் மீது அதிக மரியாதை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள மார்க் நிக்கலஸ், அவரது அணியிடமும் பயிற்றுநர்களிடமும் மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா பற்றியும் மகேந்திரசிங் டோணி பற்றியும் பிரதானமாகக் காணப்பட்ட அந்த ஆக்கத்திலே அவ்வாறு தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
மேற்கிந்தியத் தீவுகளை மூளையற்றது என்று குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவித்த அவர், எனினும் தனது கருத்துத் தவறானது என அவர் குறிப்பிட்டார்.
18 minute ago
27 minute ago
32 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
27 minute ago
32 minute ago
1 hours ago