A.P.Mathan / 2014 ஜூன் 20 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கால்பந்தாட்ட உலகக்கிண்ண தொடரின் எட்டாவது நாளான நேற்று நடைபெற்ற போட்டிகளில் முதல் போட்டி ஐவரிகோஸ்ட் - கொலம்பியா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கொலம்பியா அணி 2 இற்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. மிகுந்த விறு விறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 9 நிமிடங்களுக்குள் மூன்று கோல்களும் அடிக்கப்பட்டமை சுவாரசியமானதாகும். கொலம்பியா அணி சார்பாக ஜேம்ஸ் ரொட்ரிகஸ் 64ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். ஜுஆன் குயின்டரோ 70ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தார். 73ஆவது நிமிடத்தில் ஐவரி கோஸ்ட் வீரர் ஜெர்வினோ தனது அணிக்கான முதல் கோலை அடித்தார். போட்டியின் நாயகனாக கொலம்பியா அணியின் ஜேம்ஸ் ரொட்ரிகஸ் தெரிவு செய்யப்பட்டார். இது குழு C இற்கான போட்டியாகும்.5 minute ago
14 minute ago
19 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
19 minute ago
1 hours ago