2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

126 ஓட்டங்களுடன் சுருண்ட பங்களாதேஷ்

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 11 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்களையே பங்களாதேஷ் பெற்றுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் நேற்று முன்தினம் ஆரம்பமான இப்போட்டியின் நேற்றைய இரண்டாம் நாளை தமது முதலாவது இனிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 349 ஓட்டங்களை பெற்றவாறு ஆரம்பித்த நியூசிலாந்து, 109 ஓட்டங்களுடன் ரண் அவுட்டில் டெவோன் கொன்வேயை இழந்தது.

அடுத்து வந்த றொஸ் டெய்லர் 28 ஓட்டங்களுடன் சிறிது நேரத்தில் எபொடொட் ஹொஸைனிடம் வீழ்ந்ததோடு, அடுத்து வந்த ஹென்றி நிக்கொல்ஸும் உடனேயே எபொடொட் ஹொஸைனிடம் வீழ்ந்ததோடு, தொடர்ந்து வந்த டரைல் மிற்செல்லும் ஷொரிஃபுல் இஸ்லாமிடம் உடனேயே வீழ்ந்திருந்தார்.

இந்நிலையில், பதில் அணித்தலைவர் டொம் லேதம் 252 ஓட்டங்களுடன் பங்களாதேஷின் அணித்தலைவர் மொமினுல் ஹக்கிடம் விழ, டொம் பிளன்டென் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களைப் பெற்றிருக்கையில் 6 விக்கெட்டுகளை இழந்து 521 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது இனிங்ஸை நியூசிலாந்து இடைநிறுத்தியது.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், ஆரம்பத்திலிருந்தே ட்ரெண்ட் போல்ட் (3), டிம் செளதியிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறியது. பின்னர் யாசிர் அலியும், நுருல் ஹஸனும் விக்கெட் வேட்டையைத் தடுத்து நிறுத்திய நிலையில் 41 ஓட்டங்களுடன் செளதியிடம் ஹஸன் வீழ்ந்ததோடு, அடுத்து வந்த மெஹிடி ஹஸன் மிராஸ், தஸ்கின் அஹ்மட் ஆகியோர் போல்ட், கைல் ஜேமிஸனிடம் வீழ்ந்தனர்.

இறுதியில் 55 ஓட்டங்களுடன் ஜேமிஸனுடன் அலி வீழ்ந்ததோடு, போல்டிடம் ஷொரஃரிபுல் இஸ்லாம் விழ, தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்களையே பங்களாதேஷ் பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .