Shanmugan Murugavel / 2021 மார்ச் 31 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் இரண்டாம் நாள் முடிவில், அவ்வணியின் முதலாவது இனிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 218 ஓட்டங்கள் இலங்கை பின்தங்கியுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், நேற்று முன்தினமிரவு ஆரம்பமான குறித்த போட்டியின் இரண்டாம் நாளை, தமது முதலாவது இனிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 287 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக அணித்தலைவர் கிறேய்க் பிறத்வெய்ட் 126, ரஹீம் கொர்ன்வோல் 73 ஓட்டங்களைப் பெற்றதோடு, மிகுதி விக்கெட்டுகளை சுரங்க லக்மால் (1), டுஷ்மந்த சமீரவிடம் (2) பறிகொடுத்து, தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 354 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கையானது ஒற்றை இலக்க ஓட்டத்துடன் அல்ஸாரி ஜோசப்பிடம் அணித்தலைவர் திமுத் கருணாரத்னவை பறிகொடுத்தது. பின்னர் கைல் மேயர்ஸிடம் ஒஷாட பெர்ணான்டோ வீழ்ந்ததுடன், லஹிரு திரிமான்னேயும் 55 ஓட்டங்களுடன் கேமார் றோச்சிடம் வீழ்ந்திருந்தார்.
அந்தவகையில், இரண்டாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை தமது முதலாவது இனிங்ஸில் இலங்கை பெற்றுள்ளது. களத்தில், தினேஷ் சந்திமால் 34, தனஞ்சய டி சில்வா 23 ஓட்டங்களுடனுள்ளனர்.
43 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago