2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

டோணியின் தலைமைக்கு மாற்று இல்லை: ட்ராவிட்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 19 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணியில் டோணியின் தலைமைத்துவத்திற்கு மாற்றான ஒருவர் இல்லை எனவும் இந்தியக் கிரிக்கெட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல மகேந்திர சிங் டோணியால் முடியும் எனவும் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் நேர்முக வர்ணணையாளருமான ராகுல் ட்ராவிட் தெரிவித்தார்.

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இந்தியாவில் இடம்பெற்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2 - 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டதையடுத்து இந்திய அணி மீதும் இந்திய அணியின் தலைவர் மகேந்திர சிங் டோணி மீதும் அதிக அழுத்தங்கள் ஏற்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் மகேந்திர சிங் டோணிக்கு மாற்றான ஒருவரைத் தன்னால் காணமுடியாதுள்ளதாகத் தெரிவித்த ட்ராவிட், டோணியால் இந்தியாவை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் எனத் தான் நிச்சயமாக நம்புவதாகவும் கூறினார்.

இந்திய அணியை வழிநடத்துவதற்குரிய சக்தியும் அதற்கான ஆர்வமும் டோணியிடம் காணப்பட்டால் டோணியால் இந்தியாவைத் தொடர்ந்து வழிநடத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

தங்களது நிலை தொடர்பாக வீரர்கள் முடிவெடுக்க வேண்டுமெனத் ராகுல் ட்ராவிட் தெரிவித்தார்.  இத்தோல்வி தொடர்பான உணர்வெழுச்சிகள் இல்லாமற் போனதும், இத்தொடர் குறித்து வீரர்கள் ஆராய வேண்டும் எனத் தெரிவித்த ராகுல் ட்ராவிட், இந்தியாவை முன்னெடுத்துச் செல்லும் சக்தியும் ஆர்வமும் தங்களிடம் காணப்படுகிறதா என்பதை வீரர்களே தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

1 - 2 என்ற தோல்வியின் பின்னர் டோணியின் தலைமைத்துவம் அதிகம் விமர்சனத்திற்குள்ளானதோடு, முன்னாள் அணித்தலைவர் சுனில் கவாஸ்கர், முன்னாள் பிரதம தேர்வாளர் க்ரிஷ் ஸ்ரீகாந்த் ஆகியோர் டோணியின் பதவி நீக்கத்தினை வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .