2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

ஐந்தாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 16 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பலமான நிலையைப் பெற்றுள்ளது. இரண்டாம் நாள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 385 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதில் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களையும், அலிஸ்டயர் குக் 79 ஓட்டங்களையும், கரி பலன்ஸ் 64 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.
 
பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா, வருண் ஆரோன், அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.  
 
துடுப்பாட்டத்தில் இந்தியா அணி 152 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அணித்தலைவர் டோனி தனித்து நின்று போராடி 82 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். முரளி விஜய் 18 ஓட்டங்கள். அஷ்வின் 13 ஓட்டங்கள். 
 
பந்துவீச்சில் க்றிஸ் ஜோர்டான், க்றிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ஜேம்ஸ் அன்டேர்சன், ஸ்டுவோர்ட் ப்ரோட் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 
 
இங்கிலாந்து த ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, இந்தியா அணியை முதலில் துடுப்பாடுமாறு கேட்டுக் கொண்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .