
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற ஐந்த ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் அடங்கிய தொடரில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. முதற்ப் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. அடுத்த மூன்று போட்டிகளிலும் இந்தியா அணி வெற்றி பெற்றது. ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
ஐந்தாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 297 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஜோ ரூட் 113 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 49 ஓட்டங்களையும், அலஸ்டியர் குக் 46 ஓட்டங்களையும் பெற்றனர். மொஹமட் சமி 2 விக்கெட்களை பந்துவீச்சில் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணி 48.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 253 ஓட்டங்களைப் பெற்றது. ரவீந்தர் ஜடேஜா 87 ஓட்டங்களையும், அம்பாத்தி ராயுடு 52 ஓட்டங்களையும் பெற்றனர். பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்களையும், ஜேம்ஸ் அன்டேர்சன், ஸ்டீபன் பின், மூயேன் அலி ஆகியோர் தலா 22 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாக ஜோ ரூட் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை தொடர் நாயகனாக சுரேஷ் ரெய்னா தெரிவு செய்யப்பட்டார்.