A.P.Mathan / 2015 பெப்ரவரி 15 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

பதினோராவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி 62 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
தென்னாபிரிக்கா, சிம்பாப்வே அணிகள் மோதிய இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி, முதலில் துடுப்பெடுத்தாட தென்னாபிரிக்காவை அழைத்தது. பலமான துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட தென்னாபிரிக்க அணியை, சிம்பாப்வேயின் வேகப் பந்துவீச்சாளர்கள் தடுமாற வைத்தனர்.
தென்னாபிரிக்க அணியின் முதலாவது விக்கெட் 10 ஓட்டங்களிலும், இரண்டாவது விக்கெட் 21 ஓட்டங்களிலும், மூன்றாவது விக்கெட்டானது 67 ஓட்டங்களிலும் வீழ்த்தப்பட்டன. நான்காவது விக்கெட்டை தென்னாபிரிக்க அணி இழந்தபோது ஓட்ட எண்ணிக்கை 83 ஆக இருந்தது. ஆயினும் ஐந்தாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த டேவிட் மில்லரும் டுமினியும் இறுதிவரை ஆட்டமிழக்காதிருந்து தென்னாபிரிக்க அணியின் ஓட்ட எண்ணிக்கையை 339 ஆக உயர்த்தினர். டேவிட் மில்லர் 138 ஓட்டங்களையும் டுமினி 115 ஓட்டங்களையும் பெற்றனர்.
வீழ்த்தப்பட்ட நான்கு விகெட்களையும் பன்யங்கரா, சதாரா, சிகும்புரா, கமுன்கோஸி ஆகியோர் கைப்பற்றியிருந்தனர்.
பதிலளித்த சிம்பாப்வேயும் சிறப்பாகவே போராடியிருந்தது. ஆயினும் மத்தியவரிசை மற்றும் பின்வரிசை வீரர்களை தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்கள் சொற்ப ஓட்ட எண்ணிக்கையில் ஆட்டமிழக்கச் செய்ய, சிம்பாப்வே அணி 48.2 ஓவர்களில் 277 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 67 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
மசகட்சா 80 ஓட்டங்களையும், சிபாபா 64 ஓட்டங்களையும் அணித்தலைவர் டெய்லர் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.
தென்னாபிரிக்க அணியின் இம்ரான் தாஹிர் 3 விக்கெட்களையும், பிலென்டர், மோனி மோர்கல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர். போட்டியின் நாயகனாக தென்னாபிரிக்காவின் டேவிட் மில்லர் தெரிவுசெய்யப்பட்டார்.
38 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago