2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தானை பதறவைத்த இந்தியா 76 ஓட்டங்களால் வெற்றி

George   / 2015 பெப்ரவரி 15 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

11ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் நான்காவது போட்டியில் இந்திய அணி 76 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணியை தோற்கடித்து தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

அடிலைய்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை(15) ஆரம்பமான நான்காவது போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

முதலில் களமிறங்கிய இந்திய அணி, 50 ஒவரில், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ஓட்டங்களை குவித்தது. 

இந்தியா  சார்பாக விராட் கோலி 126 பந்துகளுக்கு 8 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 107 ஓட்டங்களை குவித்தார்.

56 பந்துகளை எதிர்கொண்ட ரைனா, 3 ஆறு ஓட்டங்கள், 5 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 74 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.

அணித்தலைவர் டோனி, 13 பந்துகளுக்கு முகங்கொடுத்து 18 ஓட்டங்களை பெற்றநிலையில் ஆட்டமிழந்தார்.

301 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய பாகிஸ்தான் அணி, 47 ஓவர்களில் 224 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .