Thipaan / 2015 மார்ச் 18 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் காலிறுதியில் இலங்கையை 9 விக்கெட்டுகளால் வென்ற தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் உலகக்கிண்ண போட்டியின் நொக்-அவுட் சுற்றில், தென் ஆப்பிரிக்கா தனது முதல் வெற்றியை பெற்றுள்ளது.
தென் ஆபிரிக்காவின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பை சமாளிக்கமுடியாத இலங்கை அணி 133 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 18 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றிபெற்றது.
தென் ஆபிரிக்கா சார்பில் குயின்டன் டீ கொக் 78 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். போட்டியின் சிறப்பாட்டக்காரராக 4 விக்கெட்டுகளை வீழ்த்திய தென் ஆபிரிக்காவின் இம்ரான் தாஹிர் தெரிவானார்.
20 minute ago
53 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
53 minute ago
3 hours ago
3 hours ago