2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஐபிஎல் சம்பியனாகியது மும்பாய் இந்தியன்ஸ்

A.P.Mathan   / 2015 மே 24 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐபிஎல் சீசன் 8இன் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி, பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களை குவித்தது.  

இதனையடுத்து 203 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களை எடுத்து தோல்வியடைந்தது. எனவே மும்பை அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .