2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

தென்னாபிரிக்க, இலங்கை தொடர்களுக்கான இந்திய மைதானங்கள் அறிவிப்பு

A.P.Mathan   / 2015 மே 25 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ள இந்திய - தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடருக்கான மைதானங்களை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, அகமதாபாத், டெல்லி, நாக்பூர், பெங்களூர் ஆகிய இடங்களில் டெஸ்ட் போட்டிகளும், சென்னை, கான்பூர், இந்தூர் அல்லது குவாலியர், ராஜ்கோட் மற்றும் மும்பாய் ஆடுகளங்களில் ஒருநாள் போட்டிகளும் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருபதுக்கு இருபது போட்டிகள் கொல்கத்தா, மொஹாலி மற்றும் தரம்சாலா ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளதாகவும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

அதேவேளை, அடுத்த வருடம் பெப்ரவரியில் நடைபெறவுள்ள இலங்கை அணியுடனான 3 இருபதுக்கு இருபது போட்டிகள் கொண்ட தொடரை நடாத்த, விசாகப்பட்டணம், பூனே, டெல்லி ஆடுகளங்கள் தெரிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .