2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சந்தர்போலின் டெஸ்ட் எதிர்காலம் கேள்விக்குறி?

A.P.Mathan   / 2015 மே 25 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுடனான தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களுக்கான பயிற்சிமுகாமில் சந்தர்போல் இணைக்கப்படவில்லை. பயிற்சிமுகாமுக்கு அழைக்கப்பட்ட 12 வீரர்களில் சந்தர்போலின் பெயர் இடம்பெற்றிருக்காதது பல சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. சந்தர்போலை ஒதுக்கும் முகமான இந்தச் செயற்பாடானது, இளைய வீரர்களை உள்வாங்கும் திட்டத்தோடு மேற்கிந்திய கிரிக்கெட் நிர்வாகம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதை உணர்த்துவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

மே 29ஆம் திகதியே மேற்கிந்தியத் தீவுகளின் டெஸ்ட் அணி அறிவிக்கப்படவுள்ள நிலையில், அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் சந்தர்போலுக்கு இன்னும் இருப்பதற்கான நம்பிக்கை முற்றிலும் இல்லாமல்போய்விடவில்லை. ஆயினும், தேர்வுக்குழுத் தலைவர் க்ளைவ் லொய்ட் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் சந்தர்போலின் தெரிவு சந்தேகமே எனக் கோடிட்டுக்காட்டுவதையும் கவனிக்கலாம். 

'கடந்த இருபது வருடங்களாக மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட்டுக்கு சந்தர்போல் வழங்கியுள்ள சேவை அளப்பரியது. ஆயினும், இப்போது இளம் வீரர்களை அணிக்குக் கொண்டுவரவேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. அதுபற்றிச் சிந்திக்கவேண்டிய நிலையிலிருக்கிறோம். கடந்த 11 போட்டிகளில் அவரது சராசரி 16 ஓட்டங்கள் என்ற நிலையிலிருப்பதைப் பார்க்கவேண்டும். கடைசி இரண்டு மூன்று போட்டிகளை மாத்திரம் கருத்தில்கொண்டு நாம் முடிவெடுக்கப்போவதில்லை. இந்தியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கெதிரான அவரது பெறுதிகளையும் நாம் அவதானித்துள்ளோம். 

புதிய இளம் வீரர்களை அணிக்குக் கொண்டுவருவதற்கான முடிவை நாம் எடுத்திருக்கிறோம். புதிய பல வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கான வாய்ப்பினை வழங்குவது அவசியமானதாகும்' என்கிறார் க்ளைவ் லொய்ட்.

பயிற்சி முகாமுக்கு அழைக்கப்பட்டுள்ள வீரர்களின் விபரம்: தெவேந்திர பிஷ்ஷூ, ஜெர்மய்ன் ப்ளக்வூட், க்ரெய்க் ப்ரத்வைட், டரன் பிராவோ, ஷனொன் கப்ரியெல், ஜேசன் ஹோல்டர், சாய் ஹோப், வீரசாமி பெர்மோல், டினேஷ் ரம்டின், கெமர் ரோச், மர்லொன் சமுவெல்ஸ், ஜெரோம் டெய்லர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .