2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பிரெஞ் பகிரங்க 3ஆம் சுற்றில் பெடரர், ஷரபோவா

George   / 2015 மே 28 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதினேழு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுக்கு சொந்தக்காரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் பிரெஞ்ச் பகிரங்க இரண்டாம் சுற்றில் ஸ்பெயினின் மார்செல் கிரநோலர்சினை 6-2, 7-6, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றிகொண்டு மூன்றாவது சுற்றில் சைப்பிரசின் மார்க்கஸ் பக்டாட்டீஸ் அல்லது பொஸ்னியாவின் டமிர் டெமூருடன் மோதவுள்ளார். 

இதேவேளை, தற்போதைய மகளிர் பிரெஞ்ச் பகிரங்க சாம்பியனான ரஷ்யாவின் மரியா ஷரபோவா இரண்டாவது சுற்றில் சக நாட்டு வீராங்கனையான விட்டாலியா டயட்சென்கோவை 6-3, 6-1 என்ற நேர் செட்களில் தோற்கடித்து மூன்றாவது சுற்றில் ஒருமுறை இறுதிப்போட்டி, இரு முறை அரையிறுதிப்போட்டிக்கு வந்தவரான அவுஸ்ரேலியாவின் சமந்தா ஸ்டோசரை சந்திக்கவுள்ளார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .