George / 2015 மே 28 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் மீது பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இரண்டு விசாரணை அறிக்கைகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
2013ஆம், 2014ஆம் ஆண்டுகள், இலங்கை அணியின் வீராங்கனைகள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சரினால், இது தொடர்பாக விசாரணை செய்வதெற்கென விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் என்.ஈ. திசாநாயக்க தலைமையில் 3 பேர் கொண்ட குழு கடந்தாண்டு நவம்பரில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட அக்குழு, தங்களது அறிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவிடம் அண்மையில் கையளித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, இது தொடர்பாக விசாரணை செய்வததெற்கென சட்டத்தரணி திருமதி. மனோலி ஜினதாசவை இலங்கை கிரிக்கெட் சபை நியமித்திருந்தது. இந்த இரண்டு அறிக்கைகளும் இலங்கை கிரிக்கெட் சபைக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதையடுத்து, இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் சபை கருத்து வெளியிட்டுள்ளது.
இதன்படி, வீராங்கனைகள் மீது இரண்டு ஆண் அதிகாரிகள் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும், ஆனால், உடல்ரீதியான துன்புறுத்தல் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் இல்லையெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, இன்னோர் ஆண் அதிகாரி பொருத்தமற்ற நடத்தைகளில் ஈடுபட்டார் எனவும், ஆனால் அது பாலியல் துன்புறுத்தல் என்ற வகைக்குள் அடங்கவில்லையெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தவிர, பெண்கள் அணியைக் கையாளுவதற்கு பெண்ணொருவரை நியமிக்காமை குறித்து இரு அறிக்கைகளும் கிரிக்கெட் சபையைச் சாடியுள்ளன. எனினும், இவ்வாண்டு ஏப்ரலிலிருந்து, இலங்கை பெண்கள் அணியின் முகாமையாளராக முன்னாள் வீராங்கனை டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் சம்பந்தப்பட்டுள்ள மூன்று அதிகாரிகளும் தங்களது முன்னைய பதவியில் தொடர்ந்து நீடிக்கவில்லையெனவும், ஏப்ரல் மாதத்தோடு அவர்களது ஒப்பந்தங்கள் நிறைவடைந்ததையடுத்து, அவர்களது ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படவில்லை எனவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago