2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

காலிறுதிக்கு முன்னேறினார் சாய்னா

George   / 2015 மே 29 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிட்னியில் இடம்பெற்றுவரும் அவுஸ்ரேலிய ஓபன் பட்மின்டன் போட்டித்தொடரில்  இந்தியாவின் சாய்னா நேவால், சீனாவின் சுன் யு-வை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.  

இப்போட்டியில் முதல் செட்டை 21-19 என்ற அடிப்படையில் சாய்னா கைப்பற்றினார்

2ஆவது செட்டில் சுதாரித்துக்கொண்டு விளையாடிய சீன வீராங்கனை சுன் யு 21-19 என அந்த செட்டை கைப்பற்றினார். 

இதனால் வெற்றியை நிர்ணயிக்கும் 3ஆவது சுற்றில் இருவரும் போட்டி போட்டு விளையாடினார்கள். 

ஆனால் சாய்னாவின் அதிரடிக்கு சுன் யு-வால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் சாய்னா மூன்றாவது செட்டை 21-14 என எளிதில் வென்று 2-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .