A.P.Mathan / 2015 ஜூன் 11 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் ஆபிரிக்கா கிரிக்கெட் வீரர்களுக்கு சுழல்பந்து பயிற்சி முகாம் வழங்கப்படவுள்ளது. தென்ஆபிரிக்காவின் சர்வதேச சுழல்பந்து வீச்சாளர்களான ஜீன் போல் டுமினி, டெம்பா பவுமா, ரீஸா ஹென்ரிக்ஸ், ஆரோன் பன்கிஷோ, டேன் பீட் ஆகியோருடன் அடுத்த வருடம் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ணத்தை கருத்திற் கொண்டு 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் ஆகியோருக்கும் இந்த பயிற்சி வழங்கப்படவுள்ளது. தென் ஆபிரிக்கா முன்னாள் வீரர்களான நிக்கி பொஜே, பௌல் அடம்ஸ் ஆகியோர் இந்த பயிற்சிகளை வழங்கவுள்ளனர்.
பங்களாதேஷ் மற்றும் இந்தியா நாடுகளுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை தென் ஆப்ரிக்கா அணி மேற்கொள்ள உள்ள நிலையிலும், அடுத்த வருடம் பங்களாதேஷில் 19 வயதுக்குட்ப்பட்ட உலகக்கிண்ணம் நடைபெறவுள்ள நிலையிலுமே அங்கே தங்கள் நாட்டு சுழல்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயற்படவேண்டும் என்ற காரணத்தினால் இந்த பயிற்சி முகாமை கிரிக்கெட் தென் ஆபிரிக்கா ஏற்பாடு செய்துள்ளது.
3 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
9 hours ago