A.P.Mathan / 2015 ஜூன் 15 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் மூன்றாவது நாளான 12ஆம் திகதி சகிப் அல் ஹசன் 4 விக்கெட்களைக் கைப்பற்றிக்கொண்டார். தன்னுடையை முன்னாள் பயிற்றுவிப்பாளரான நஸ்முள் ஆப்தீன் வழங்கிய யுக்தியின் மூலமே 4 விக்கெட்களை கைப்பற்ற உதவியதாக சகிப் அல் ஹசன் கூறியுள்ளார்.
இரண்டாவது நாள் ஆட்டம் நிறைவடைந்ததும் அவரிடம் எனது பந்துவீச்சில் சிறிய மாற்றங்கள் செய்வது தொடர்பாக ஆலோசனையைப் பெற்றேன். அதன் போது அவர் நல்ல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதன்படியே விக்கெட்களைக் கைப்பற்றிக்கொண்டேன் என மேலும் சகிப் அல் ஹசன் கூறியுள்ளார். நஸ்முள் ஆப்தீன், தற்போது பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் அபிவிருத்தி முகாமையாளராக கடமையாற்றுகின்றார். இவர் சகிப் அல் ஹசனின் ஆரம்பகால பயிற்றுவிப்பாளராக இவர் பயிற்சிகளை வழங்கியுள்ளார்.
சகிப் அல் ஹசன் கைப்பற்றிய 4 விக்கெட்கள் மூலம் பங்களாதேஷில் டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்களை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை தனதாக்கினார்.
3 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
9 hours ago