2026 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

இந்திய டெஸ்ட் உடன் சங்கா ஓய்வு

A.P.Mathan   / 2015 ஜூன் 15 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் முதற் போட்டியுடன் தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணி வீரர் குமார் சங்ககார உறுதி செய்துள்ளார். இதன் படி அவர் இன்னமும் 3 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடவுள்ளார். 

பாகிஸ்தான் தொடரில் 2 போட்டிகளில் மாத்திரமே தான் விளையாடுவேன் என தெரிவுக்குழுவுக்கு அறிவித்துள்ள சங்ககர, காலியில் நடைபெறவுள்ள இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே உலகக்கிண்ணத் தொடருடன் தான் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக குமார் சங்ககார அறிவித்த போதும் இலங்கை கிரிக்கெட்டின் வேண்டுகோளுக்கு இணங்க மேலும் சில காலம் டெஸ்ட் போட்டிகளில் விளையாட சம்மதம் தெரிவித்தார். 

முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ள போதும் குமார் சங்ககாரவின் சொந்த ஊரான கண்டியில் பல்லேகல மைதானத்தில் நடாத்தவும் வாய்ப்புகளும் உள்ளன. 

ஆனால் காலியில் தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்ட சங்ககார அதே மைதானத்தில் ஓய்வு பெறும் வாய்ப்புகளும் உள்ளன. அத்துடன் குமார் சங்ககாரவின் பிரியாவிடை நிகழ்வுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .