George / 2015 ஜூன் 17 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தொடருக்கான மைதானங்கள் தொடர்பாக ஆராய்வதற்கான கூட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானம் தொடர்பாக அதிக கரிசனை எழுப்பப்பட்டுள்ளது. அம்மைதானத்தின் பார்வையாளர் அரங்குகளின் 3 பகுதிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அம்மைதானத்தில் போட்டிகளை நடத்தாமல் விடுவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் எண்ணியுள்ளது.
புதிதாகக் கட்டப்பட்ட பார்வையாளர் அரங்குகள், மாநகர சபையின் சுற்றுச்சூழல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின்பேரில் இதுவரை காலமும் பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்படாமல் காணப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் போட்டிகளை நடத்துவதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கடுமையான முயற்சிகளை எடுத்து வருவதாகவும், எனினும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அம்மைதானம் குறித்து இதுவரை பெரியளவிலான ஆதரவுப் போக்கினைக் கொண்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்தாண்டு மார்ச் 11ஆம் திகதி ஆரம்பித்து, ஏப்ரல் 3ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு இருபது தொடரில் 16 அணிகள் பங்குபற்றவுள்ளதோடு, 35 போட்டிகள் இடம்பெறவுள்ளன.
3 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
8 hours ago