2026 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

டோனி, முஷ்டபிசூருக்கு தண்டம்

A.P.Mathan   / 2015 ஜூன் 22 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டியில் மோதலில் ஈடுபட்ட இந்திய ஒரு நாள் சர்வதேச அணியின் தலைவர் மகேந்திரா சிங் டோனி மற்றும் இந்த அறிமுகப் போட்டியில் போட்டி நாயகன் விருதைப் பெற்ற முஷ்டபிசூர் ரஹ்மான் ஆகியோருக்கு சர்வதேசப் பேரவை தண்டம் அறவிட்டுள்ளது. டோனிக்கு போட்டியின் ஊதியத்தில் 75% தண்டமாகவும், முஷ்டபிசூருக்கு போட்டியின் ஊதியத்தில் 50% தண்டமாகவும் அறவிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் டோனிக்கு மட்டுமே தண்டமே அறவிடப்பட்டது. இருப்பினும் இந்திய அணி சார்பாக முஷ்டபிசூருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவருக்கு தண்டம் அறவிடப்பட்டது.

இந்தப் போட்டியில் டோனி மற்றும் ரெய்னா ஆகியோர் ஓட்டத்தைப் பெற்ற வேளையில் அவர்களின் ஓடுபாதையில் முஷ்டபிசூர் குறிக்கிட முயற்சித்தார். ரெய்னா அவருடன் மோதாமல் தப்பித்து ஓட  முஷ்டபிசூர் தங்களை குறுக்கிட முயற்சிக்க அதை  கவனித டோனி முஷ்டபிசூரை தள்ளி விட்டு அலல்து இடித்து தள்ளி விட்டு ஓட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.  அனுபவம் வாய்ந்த டோனி இந்த சம்மவத்தை பெரிதுபடுத்தாமல் விட்டு இருக்க வேண்டும். அவருடைய அனுபவத்திற்கு இந்த சம்பவம் ஏற்புடையதல்ல. எனவேதான் அவருக்கு இந்த தண்டம் அறவிடப்பட்டுள்ளது என போட்டி மத்தியஸ்தர் கூறியுள்ளார். விசாரணையின் போது டோனி இந்தக் குற்றத்தை ஏற்கவில்லை. அத்துடன் பந்துவீச்சாளர் வேண்டுமென்றே இவ்வாறு செயற்பட்டதாகவும் 19 வயதுடைய அவருக்கு இது சில விடயங்கள் தெரியாமல் இருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் டோனி மேலும் தெரிவித்துள்ளார்.   

இந்தப் போட்டியில் பங்களாதேஷ் வீரர்கள் ஆக்ரோஷமாக நடந்தகொண்ட அதேவேளை இந்திய அணி வீரர்களை அவமதிக்கும் படி நடந்துகொண்டனர். அத்துடன் நடுவர்கள் பங்களாதேஷ் அணித்தலைவருக்கு எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ரோஹித் ஷர்மா இதே போன்ற சம்பவத்திற்கு முஷ்டபிசூருக்கு எச்சரிக்கை விடுத்தது இருந்தார். இந்த விடயங்கள் டோனிக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருந்ததாகவும் அதன் காரணமாகவே இவ்வாறு நடந்து கொண்டார் எனவும் கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .