A.P.Mathan / 2015 ஜூன் 24 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய இருபதுக்கு இருபது அணியின் தலைவரும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான ஆரொன் ஃபின்ச், பந்தொன்று அவரது நெஞ்சுப் பகுதியைத் தாக்கியதன் காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஐ.பி.எல் தொடரில் ஏற்பட்ட உபாதைக்குப் பின்னர் அவர் பங்குபற்றிய முதலாவது போட்டியாக, யோர்க்ஷையர் பிராந்திய அணியின், இரண்டாம் நிலை அணிக்காகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போது, அவர் அடிக்க முனைந்த பந்து துடுப்பில் பட்டு, அவரது நெஞ்சுப் பகுதியைத் தாக்கியது.
அதன்போது அவர் இரத்தத்தை வாயால் வெளியிட்டதோடு, கடுமையான வலிக்கு உள்ளானார். இதன் காரணமாக அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, பின்னர் வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
அவுஸ்திரேலியாவின் மற்றொரு வீரரான மொய்ஸஸ் ஹென்றிக்கஸ், அண்மையில் இங்கிலாந்தின் பிராந்திய அணியான சரே அணிக்காக விளையாடும் போது, மற்றொரு வீரருடன் மோதியதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டியேற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
9 hours ago