Shanmugan Murugavel / 2015 ஜூலை 20 , பி.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு அயர்லாந்தை பிறப்பிடமாக கொண்ட வெஸ்ட் ப்ரோம்விச் கழக கால்பந்தாட்ட வீரர் ஜேம்ஸ் மக்கெலன், தனது கழகதுக்கும் சார்ல்ஸ்டன் கழகத்துக்குமிடையே தெற்கு கரோலினாவில் இடம்பெற்ற போட்டியில் பிரித்தானியாவின் தேசிய கீதம் இசைக்கப்படும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்புறம் திரும்பி நின்றுள்ளார்.
இவரது இச்செயலுக்கு முக்கியமாக அயர்லாந்தில் உள்ளவர்கள் உட்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ள வேளை இங்கிலாந்திலுள்ள ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இரண்டு உலகப்போர்களிலும் உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவுகூறும் பொருட்டு பிரித்தானியாவில் அடையாளப்படுத்தப்படும் பொப்பி மலரை அணிய கடந்த வருடம் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து சில பிரித்தானியம ஊடகங்களால் இலக்கு வைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது கருத்து தெரிவித்திருந்த மக்கெலன், போர்க்களத்தில் போராடியவர்களை தான் மதிப்பதாகவும், தான் உட்பட வடக்கு அயர்லாந்தில் முக்கியமாக டெர்ரியில் வசிப்பவர்களுக்கு பொப்பி வேறு அர்த்தத்தை தருவதாக குறிப்பிட்டிருந்தார்.
இரத்த ஞாயிறு என வர்ணிக்கப்படும் மக்கெலன் நினைவுகூரும் சம்பவத்தில், 14 கத்தோலிக்க பொதுமக்கள், பிரிட்டிஷ் இராணுவ வீரர்களால் 1972ஆம் ஆண்டு கொல்லப்பட்டிருந்தனர்.
7 minute ago
18 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
19 minute ago