A.P.Mathan / 2015 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பாப்வே - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில், சிம்பாப்வே 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நியூசிலாந்து, றொஸ் டெய்லரின் ஆட்டமிழக்காத 112, கேன் வில்லியன்ஸனின் 97, கிரான்ற் எலியட்டின் 43 ஓட்டங்களின் துணையோடு, 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை ,ழந்து 303 ஓட்டங்களைப் பெற்றது.
டினாஷே பனியங்கார 2, சமு சிபாபா 1 என விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
304 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, கிறெய்ன் ஏர்வினின் ஆட்டமிழக்காத 130, ஹமில்டன் மஸகட்ஸாவின் 84, சமு சிபாபாவின் 42, எல்டன் சிக்கும்புராவின் 26 ஓட்டங்களின் துணையோடு 49 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
நியூசிலாந்தின் நேதன் மக்கலம், 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இப்போட்டியின் நாயகனாக, கிறெய்க் ஏர்வின் தெரிவானார்.
7 minute ago
18 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
19 minute ago