Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2021 நவம்பர் 30 , பி.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 204 ஓட்டங்களை இலங்கை பெற்றுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், காலியில் நேற்று ஆரம்பமான இப்போட்டியின் இன்றைய இரண்டாம் நாளை ஒரு விக்கெட் இழப்புக்கு 113 ஓட்டங்களைப் பெற்றவாறு தமது முதலாவது இனிங்ஸை ஆரம்பித்த இலங்கை, குறிப்பிட்ட நேரத்திலேயே ஒஷாத பெர்ணான்டோவை ஜோமெல் வொரிக்கானிடம் இழந்தது.
பின்னர் சிறிது நேரத்தில் வீராசாமி பெருமாளிடம் 73 ஓட்டங்களுடன் பதும் நிஸங்க வீழ்ந்ததோடு, தனஞ்சய டி சில்வாவும் உடனேயே அவரிடமும் வீழ்ந்ததோடு, தொடை உபாதை காரணமாக அஞ்சலோ மத்தியூஸும் களத்திலிருந்து வெளியேறினார்.
தொடர்ந்து சரித் அஸலங்க, தினேஷ் சந்திமாலும் பெருமாள், வொரிக்கானிடம் வீழ்ந்ததோடு, சிறிது நேரத்தில் ரமேஷ் மென்டிஸும் வொரிக்கானிடம் வீழ்ந்தார்.
இதனையடுத்து மத்தியூஸ் மீண்டும் துடுப்பெடுத்தாட வந்தபோதும், சுரங்க லக்மால், லசித் எம்புல்தெனிய ஆகியோர் அடுத்தடுத்து பெருமாளிடம் வீழ்ந்ததோடு, இறுதியாக 29 ஓட்டங்களோடு மத்தியூஸும் வொரிக்கானிடம் விழ, சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 204 ஓட்டங்களை இலங்கை பெற்றது.
பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், அணித்தலைவர் கிறேய்க் பிறத்வெய்ட், ஜெர்மைன் பிளக்வூட் மூலம் நிதானமான ஆரம்பத்தைப் பெற்றது.
இந்நிலையில், 44 ஓட்டங்களுடன் பிரவீன் ஜெயவிக்கிரமவிடம் பிளக்வூட் வீழ்ந்த நிலையில், மழையால் தேநீர் இடைவேளைக்கு சற்று முன்பதாகவே ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில், ஒரு விக்கெட் இழப்புக்கு 69 ஓட்டங்களைப் பெற்றவாறு மேற்கிந்தியத் தீவுகள் உள்ளது. களத்தில், பிறத்வெய்ட் 22, என்குருமாஹ் பொனர் ஓர் ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 minute ago
35 minute ago