Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 18 , பி.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் நியூசிலாந்து ஓட்டங்களைக் குவிக்கின்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததுடன், இரண்டாவது போட்டியை நியூசிலாந்து வென்ற நிலையில் மெளன்ட் மகட்டரேயில் வியாழக்கிழமை (18) ஆரம்பித்த இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்தின் அணித்தலைவர் டொம் லேதம் தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.
அந்தவகையில் துடுப்பெடுத்தாடி வரும் நியூசிலாந்து முதல் நாள் முடிவில் தமது முதலாவது இனிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 334 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில் டெவொன் கொன்வே 178, ஜேக்கப் டஃபி 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலுள்ளனர். லேதம் 137 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். வீழ்த்தப்பட்ட விக்கெட்டை கேமார் றோச் கைப்பற்றினார்.
8 minute ago
27 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
27 minute ago
36 minute ago