Editorial / 2018 ஒக்டோபர் 29 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், 3-0 என அவுஸ்திரேலியாவை பாகிஸ்தான் வெள்ளையடித்தது.
இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஏற்கெனவே வென்று அசைக்க முடியாத முன்னிலையைப் பெற்றிருந்த பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என அவுஸ்திரேலியாவை வெள்ளையடித்தது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், பாபர் அஸாம் 50 (40), ஷகிப்ஸடா பர்ஹான் 39 (38), மொஹமட் ஹபீஸ் ஆட்டமிழக்காமல் 32 (20), ஷோய்ப் மலிக் 18 (12) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மிற்செல் மார்ஷ் 2, அடம் ஸாம்பா, அன்றூ டை, நேதன் லையன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 151 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்களையே பெற்று 33 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், பென் மக்டர்மூட் 21 (20), மிற்செல் மார்ஷ் 21 (24), அலெக்ஸ் காரே 20 (09), கிறிஸ் லின் 15 (13) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஷடாப் கான் 3, ஹஸன் அலி 2, பாஹீம் அஷ்ரப், உஸ்மான் கான், மொஹமட் ஹபீஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இப்போட்டியின் நாயகனாக ஷடாப் கானும் தொடரின் நாயகனாக பாபர் அஸாமும் தெரிவாகினர்.
7 minute ago
16 minute ago
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
21 minute ago
1 hours ago