Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 15 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் பிறீமியர் லீக்கின் முதலாவது ஏலத்தில், இலங்கையின் குசல் மென்டிஸை 42 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய்களுக்கு பெஷாவர் ஸல்மி வாங்கியிருந்தது.
புதன்கிழமை (11) நடைபெற்ற இந்த ஏலத்தில் 31 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய்களுக்கு இலங்கையின் குசல் பெரேராவை ஹைதரபாத் ஹூஸ்டன் கிங்ஸ் அணி வாங்கியதுடன், 7.5 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய்களுக்கு இலங்கையின் தசுன் ஷானகவை லாகூர் குவாலன்டர்ஸ் வாங்கியிருந்தது.
இந்த ஏலத்தில் அதிகபட்சமாக 86.5 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய்களுக்கு பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷாவை ராவல்பின்டி வாங்கியதுடன், 85 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய்களுக்கு சகலதுறைவீரர் பஹீம் அஷ்ரஃப்பை இஸ்லாமபாத் யுனைட்டெட் வாங்கியிருந்தது.
நான்கு வீரர்களையே ஒவ்வொரு அணியும் தக்க வைக்க முடியுமென்ற நிலையில் 79 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய்களுக்கு கராச்சி கிங்ஸால் டேவிட் வோர்னர் வாங்கப்பட்டிருந்தார். இதுதவிர லாகூர் குவாலன்டர்ஸால் 79.5 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய்களுக்கு பக்கர் ஸமன் வாங்கப்பட்ட நிலையில், 76 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய்களுக்கு ஹரிஸ் றாஃப்ப்பை அவ்வணி கைச்சாத்திட்டிருந்தது.
நியூசிலாந்தின் டரைல் மிற்செல்லை 80.5 மில்லியன் பாகிஸ்தான் ரூப்பாய்களுக்கு ராவல்பின்டி வாங்கியதுடன், 70 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய்களுக்கு மார்க் சப்மனை வாங்கியிருந்தது.
4 minute ago
7 minute ago
33 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
7 minute ago
33 minute ago
39 minute ago