Shanmugan Murugavel / 2021 நவம்பர் 30 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏழாவது தடவையாக, உலகின் சிறந்த வீரருக்கான பலூன் டோர் விருதை ஆர்ஜென்டீனாவின் லியனல் மெஸ்ஸி வென்றுள்ளார்.
போலந்தின் றொபேர்ட் லெவன்டோஸ்கி, இத்தாலியின் ஜோர்ஜினியோவைத் தாண்டியே விருதை இம்முறை மெஸ்ஸி வென்றிருந்தார்.
மெஸ்ஸி 613 புள்ளிகளைப் பெற்ற நிலையில், லெவன்டோஸ்கி 580 புள்ளிகளையும், ஜோர்ஜினியோ 460 புள்ளிகளையும் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், சிறந்த முன்களவீரராக லெவன்டோஸ்கியும், சிறந்த கோல் காப்பாளராக இத்தாலியின் ஜல்லூயிஜி டொன்னருமா தெரிவானார். சிறந்த கழகமாக இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் செல்சி தெரிவாகியது.
சிறந்த வீராங்கனையாக ஸ்பெய்னின் அலெக்ஸியா புடெல்லஸ் தெரிவாகியிருந்தார்.
39 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
50 minute ago
1 hours ago