Editorial / 2026 மார்ச் 29 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடப்பு ஆண்டின் முதல் ஐபிஎல் போட்டி சனிக்கிழமை (28) அன்று நடந்தது. இதில் நடப்பு சாம்பியன் அணியான பெங்களூர் அணி, ஹைதராபாத் அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி கண்டது. முன்னதாக இந்த போட்டியில் சால்ட் பிடித்த ஒரு கேட்ச் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஹெண்ட்ரிச் கிளாசன் அடித்த ஒரு பந்தை டீப் மிட் விக்கெட்டில் பவுண்டரி எல்லை அருகே சால்ட் பிடித்தார். இதற்கு நடுவரும் அவுட் கொடுத்தார். ஆனால் இது அவுட் இல்லை என்றும், பேக் சைட் புட்டேஜ் பார்த்தால் இதில் தெளிவாக தெரியும் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.
கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்ச்ர்ஸ் - ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. முதல் போட்டியே ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. ஓட்டங்
முதலில் விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 201 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து, பேட்டிங்கை தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது.
விராட் கோலி அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் 69 ஓட்டங்கள் எடுத்தார். தேவ்தத் படிக்கல் 26 பந்துகளில் 61 ஓட்டங்கள் விளாசினார். முன்னதாக இந்த போட்டியில் சால்ட் பிடித்த ஒரு கேட்ச் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. சால்ட் மொத்தம் 3 கேட்ச்களை பிடித்தார். இதில் ஹெண்ட்ரிச் கிளாசன் அடித்த ஒரு பந்தை டீப் மிட் விக்கெட்டில் பவுண்டரி எல்லை அருகே சால்ட் பிடித்தார். துள்ளி குதித்து பந்தை படித்த சால்ட் நிலை தடுமாறி பவுண்டரி லைனில் கால் பட்டது போல தெரிந்தது.
விக்கெட்டா இல்லை சிக்சரா என்று குழப்பம் ஏற்பட்டதால் மூன்றாவது நடுவருக்கு என்று முடிவு அனுப்பப்பட்டது. மூன்றாவது நடுவர் ஆய்வுக்கு பிறகு அவுட் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், ரீப்ளேவில் சால்ட்டின் கல் பவுண்டரி லைனை டச் செய்வது போல இருந்தது. எனினும் அவுட் என்று மூன்றாவது நடுவரின் முடிவு வந்ததால் ஐதராபாத் ரசிகர்கள் அதிர்ச்சிஅடைந்தனர்.
19 minute ago
24 minute ago
31 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
24 minute ago
31 minute ago
46 minute ago